“கறி விருந்து படையல்” விமர்சையாக நடைபெற்ற மண்டி அம்மன் கோவில் திருவிழா..!!
மயிலாடுதுறை அருகே டி.பி.எம்.எல் கல்லூரியில் இயற்பியல் துறையில் 1980 முதல் 2000 வரை 20 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். கல்லூரிக்கு பல்வேறு நல் உதவிகளை செய்த முன்னாள் மாணவர்கள், இதன் முத்தாய்ப்பாக “பிஸிமீட்” அமைப்பின் மூலம் ஒன்றிணைந்து தாங்கள் பயின்ற துறைக்கு தரைத்தளத்தில் மட்டும் செயல்பட்டு வந்த கட்டடத்தை ரூ 38 லட்சம் மதிப்பீட்டில் இளங்கலை பிரிவுக்கு 3 வகுப்புகளும், முதுகலை பிரிவுக்கு இரண்டு வகுப்புகள் என மொத்தம் ஐந்து வகுப்பறை கட்டடங்கள் உடன் முதலாம் தளத்தில் உயர்த்தி கட்டி வழங்கி உள்ளனர்.மேலும் இதன் திறப்பு விழாவில் டிஎல்எல்சி பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ், மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் நகராட்சியில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, ஜே சி ஐ இணைந்து நடத்திய மாபெரும் மராத்தான் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர் மாதவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் மேலும் இந்த மராத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் , மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த மரத்தான் ஓட்டப்பந்தயமானது கே.வி.எஸ் .மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், மற்றும் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது இதில் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கபரிசும், மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மண்டி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கறி விருந்து படையல் இட்டு சிறப்பு சிறப்பு பூஜை வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரங்களை செய்து கறி , கூழ் உள்ளிட்டவைகளை படையலாக படைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட கறி விருந்து உணவினை 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு பிரசாத அன்னதானமாக கோவில் நிர்வாகிகள் வழங்கினர் இதில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளை தரிசனம் செய்து அருள் பாவித்து பின்னர் பிரசாத கறி விருந்து அன்னதானத்தை உண்டு சென்றனர்
வேலூர் வனகோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்க பல லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வனச்சரக பகுதியில் கடந்தாண்டு 65 ஆயிரம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மரக்கன்றுகளை வனச்சரக அலுவலர் குமார் நட்டு முடிக்காமல் பணியில் கவனக்குறைவாக இருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி விசாரணை நடத்தி இதன் அறிக்கையை மண்டல வனப்பாதுகாவலர் ராகுலிடம் சமர்ப்பித்தார் அதன் பேரில் பணியில் கவனக்குறைவாக இருந்தாக வனச்சரக அலுவலர் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் அப்துல் சபிக் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாமினை தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மண்டல பொறுப்பாளர் வேணுகோபால் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்…
விருதுநகரில் ஆகஸ்ட் 19 ம் தேதி 185 ஆவது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியின் துவக்கமாக தேசபந்து மைதானத்தில் சுதந்திர தின நினைவு ஸ்தூபியை ஒரே நேரத்தில் அனைத்து புகைப்பட கலைஞர்களும் குழுவாக போட்டோ எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரத்ததானம் நடைபெறும் பள்ளி வரை பேரணியாக சென்று இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு துணை காவல் கண்காணிப்பாளர் S .பவித்ரா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி பொன்னுச்சாமி தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேசன் துணைத் தலைவர், மற்றும் போட்டோகிராபர் வீடியோ கிராபர் அசோசியேசன் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.இந்த முகாமில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் போட்டோ & வீடியோ சங்க உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஷபிக் எங்கள் தலைவர் வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..