சென்னைக்கு புதுசு ஆனால் எனக்கு கிடைத்தது..? ஊரும் உறவும்-30
அடிக்குற வெயிலுக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிச்சே ஆகணும்னு சைதாப்பேட்டையில இருக்க ஒரு ரோடு சைடு கடையில் ஜூஸ் குடிச்சுட்டு இருந்தோம். அப்போ வயசான பாட்டி வந்து மயக்கமா இருக்குமா ஒரு ஜூஸ் கூடுமா கேட்டாங்க, ஆனா அந்த பாட்டி காசு கொடுத்த அப்போ வாங்கல, என் அக்கா காசு வாங்கல என்று காரணம் கேட்டேன். அதற்கு அந்த அக்கா
என் பெயர் பிச்சம்மாள், நான் திருநெல்வேலியை சேர்ந்த பெண். சிறு வயதிலேயே தாய் மற்றும் தந்தையை இழந்தேன். பின் என்னை என் பெரியப்பா, பெரியம்மா தான் வளத்தார்கள், ஊரில் சிறு பெட்டிக்கடை வைத்து அதில் வருமானத்தை வைத்து என் கல்லூரி படிப்பை படித்தேன்.
படித்து முடித்ததும் 18 வயதிலேயே திருமணம்.., என் கணவருக்கும் படித்த படிப்பிற்கு ஊரில் வேலை கிடைக்கவில்லை, இருவரும் சென்னை வந்தோம். சென்னை வந்து தமிழ் மேட்ரிமோனியில் டெலிகாலராக வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.
எதிர்பார்த்ததை விட நிறைய வருமானம் கிடைத்தது. இருவருக்கும் வாழ்க்கை நன்றாக தொடங்கியது. இருவரின் வருமானத்தையும் சேர்த்து வைத்து வந்தோம். வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு ஏஜென்ட்டை சந்தித்து மனைகள் பற்றி விசாரித்தோம்.
ஒரு விற்பனைக்காக வீடே இருக்கிறது என்று சொல்லி, எங்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக வாங்கினார். ஒரு வீட்டை காட்டி இது தான் உங்களுக்கான வீடு என்று சொல்லி பத்திர பதிவு எல்லாம் செய்துக்கொடுத்தார்.
அதற்காக மேலும் 8 லட்சம் ரூபாய் கொடுத்தோம். சில நாட்கள் கழித்து தான் தெரிந்தது அது வேறு ஒருவரின் வீடு என்று, எங்களுக்கு என்று ஆறுதல் சொல்ல ஒரு உறவு கூட சென்னையில் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
எங்களின் புகாரை ஏற்ற போலீஸ் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, நீண்ட நாட்கள் இந்த பிரச்னைக்காக காவல் நிலையம் என அலைந்து கொண்டு இருந்ததால், என் வேலையும் போனது.
வருமானம் இல்லாமல் சென்னையில் பிழைப்பது கஷ்டம் என்று புரிந்துக்கொண்டேன் எனவே, வீட்டு பக்கத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறோம். ஒரு முறை ஏமார்ந்து இருக்கலாம் ஆனால் என்றாவது ஒரு நாள் ஜெய்திடுவோம் என்ற நம்பிக்கையில் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் என்பது போல்.., சிறுவயதில் தாய், தந்தை இழந்தேன்.., சிறு வயதில் திருமணம்.., திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது இன்று வரை குழந்தையில்லை.., வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணமும் பறிபோனது. எத்தனை சோதனைகள் வந்தாலும் தன்னம்பிக்கை என்ற ஒன்று என்னுடம் எப்பொழுதும் இருக்கும் என கூறினார் பிச்சம்மாள். இவரின் வீடு வாங்க வேண்டும் என்ற கனவிற்கு வாழ்த்துக்கூறி.., நானும் அங்கிருந்து சென்று விட்டேன்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகளை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…