வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பீஸ்ட் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வரும் படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் முதல் வாரம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்றும் இதற்கான டோக்கன் மாநிலம் முழுவதும் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின.
மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.