ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள்…!! திமுக சட்டத்துறை எதிர்க்கும்…!!
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திமுக சட்டத்துறை எதிர்க்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல முக்கியமான வழக்குகளில் திமுக சட்டத்துறை ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் ஒன்ரிய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, புதிய குற்றவியல் சட்டங்களை திமுக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..