30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்..!! அமைச்சர் ஏ.வ.வேலு அளித்த உறுதி..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?
அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பயன் பாட்டிற்குவரவுள்ள புதிய பேருந்து நிலையத்தை ஆன்மீக பக்தர்களின் வருகை அதிகரிப்பதையொட்டி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்..
திருவண்ணாமலையில் நேற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை இரயில் நிலையம் அருகில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்..
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஆன்மீக தலமான திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கிரிவலம் சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மக்கள் பயணம் செய்ய பேருந்துகள் போதவில்லை..
எனவே மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது..
இந்த பேருந்துகளை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி தேவைபடுவதால் இப்பகுதியை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான ஏறத்தாழ 4 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையகட்டுமான பணிகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது..
அதற்காக தமிழக அரசு 15 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இருப்பதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.. இந்நிகழ்ச்சியின் போது உடன் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருக்கு பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..