நியூட்ரினோ ஆய்வு திட்டம்..!! வைகோ தாக்கல் செய்த வழக்கு..!! மதுரை நீதிமன்றம் உத்தரவு..!!
தேனி பொட்டிபுரம் பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி 2015ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், மக்களை பாதிக்கச் செய்யும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் இந்த சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..