மணலுக்கு அடியில் கிடந்த கால்களை கண்டு… பதறிய அக்கம் பக்கத்தினர்..
திருநெல்வேலி மாவட்டம், வீரவ நல்லூர் அருகே உள்ள புதுக்குடி செல்லப்பிள்ளை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்.
இவரது மனைவி மற்றும் மகன் இறந்த நிலையில் தனது இன்னொரு மகனான பேச்சிமுத்துவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கட்டிட வேலை பார்க்கும் பேச்சு முத்து நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே படுத்து தூங்கியுள்ளார்.
அந்த கோவிலில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைக்க இருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
கோவிலின் கட்டிட பணிக்காக டிப்பர் லாரியில் எம் சேண்ட் கொண்டு வந்த வடக்கு காருகுறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமார் (29) என்பவர் கோயில் அருகே தூங்கிக்கொண்டு இருந்த பேச்சிமுத்துவை கவனிக்காமல் அவர் மீது மண்ணை கொட்டிவிட்டு சென்றுள்ளார்.
இன்று அதிகாலையில் மாரியப்பன் என்பவர் தனது வீட்டிலிருத்து வெளியே வந்த போது எம் சேண்ட் மண்ணில் ஒருவர் கால் புதைந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.
விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து மண்ணை அகற்றி பார்த்தபோது பேச்சிமுத்து மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
உடனே அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பேச்சிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீஸார் பேச்சிமுத்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் லாரி ஓட்டுநர் முத்துக்குமாரை கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் அறங்கேறிய இச்சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்