நீட் ஒரு கொடிய நோய்.., அதை விரட்டி அடிக்க வேண்டும்..! மதிமுக வைகோ முயற்சி..!!
இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.,
அதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவனவன் நீட் தேர்வு விலக்கு கடிதத்தில் கையெழுத்திட்டார்.
நீட் தேர்வு விலக்குக்கு ஆதாரவாக 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.., அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்..,
இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில்.., இன்னும் 50 லட்சம் பேரிடமும் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் ஒப்படைப்போம் என அவர் கூறினார்.
நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.
வைகோ கையெழுத்து :
நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி.., பின் மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்து நீட் விலக்கிற்காக கையெழுத்து கேட்டுள்ளார்.
அதற்கு மதிமுக வைகோவும் நீட் விலகிற்காக ஆதாரவு கடிதத்தில் கையெழுத்திட்டார்.., பின் நீட் விலக்கு குறித்து மதிமுக வைகோ கூறியது.
நீட் என்பது ஒரு கொடிய நோய்.., இந்த நோய் பல மாணவர்களின் உயிரை கொன்றுள்ளது.. நீட்டை இந்த நாட்டில் இருந்து அடியோடு ஒழிப்போம்.
இதுவரை 10லட்சம் பேர் கையெழுத்திட்ட நிலையில்.., கூடிய சீக்கிரமே 50 லட்சம் பேரிடமும் கையெழுத்து வாங்கி ஒரு புரட்சி செய்வோம்..
மாணவர்கள் நீட்டால் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொண்டு வருகின்றனர்.. இதற்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். என மதிமுக பொதுசெயலாளரும்.., மாநிலங்கள் அவை அமைச்சரும் ஆன வைகோ தெரிவித்துள்ளார்.
தொல் திருமாவளவன் பேச்சு :
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு.தொல் திருமாவளவன் நீட் விலகிற்கு ஆதர்வாக கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், என் அன்பு தம்பி.., உதயநிதி சொன்னதை போல நீட்டை அடியோடு ஒழித்துவிடுவோம்.
நீட் விலக்கு குறித்து ஆளுநர் ரவியிடம் பலமுறை முறையிட்டோம் அந்த மசோதாக்களை கிடைப்பில் வைத்துள்ளார்., இதை அவர் செய்வதற்கான காரணம் என்னவென்று அனைவருக்கும் தெரியும்..
நீட் விலகிற்கு ஆதரவு கொடுக்காமல்.., எதிர்க்கும் அனைவருக்கும் நாங்கள் சொல்ல வருவது ஒன்று மட்டுமே.., இந்த நீட் அடியோடு ஒழிக்கப்படும்.
நீட்டை ஒழிக்க முடியாது என பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.., அதை நாங்கள் உடைத்து காட்டுவோம் என தொல் திருமாவாளவன் பேசியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..