தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு நான்கு மாதங்களில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இதனால் பல சர்ச்சைகள் விமர்சனங்களும் வந்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். குழந்தைகள் பிறந்ததால் இருவரும் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்றனராம். குழந்தைகளை பார்த்துக்கொள்ள மூன்று பணியாட்க்களையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா முழுமையாக குழந்தைகளுடன் இருக்க விரும்புவதால் அடுத்த ஒரு வருடத்திற்கு படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வருடம் எந்த படங்களிலும் நயன்தாரா நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. நடிகர் அஜித் துணிவு படத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது