செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியதால் சலசலப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் , வருவாய் துறையினர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் 77 வது சுதந்திர தின விழாவையொட்டி மூவர்ண தேசிய கொடியினை செங்கம் துனை வட்டாட்சியர் மூவர்ண தேசிய கொடியை தலைகீழாய் ஏற்றினார்.
பள்ளி மாணவர்கள் மூவர்ண தேசிய கொடி தலைகீழாய் உள்ளது என முனுமுனுத்ததை அடுத்து உடனடியாக ஏற்றப்பட்ட மூவர்ண தேசிய கொடியை கீழ் இறக்கி பின்னர் மீண்டும் கொடியை ஏற்றினர் தலைகீழாய் கொடியை ஏற்றியதால் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டது