நரசிம்ம ஜெயந்தி : கேட்ட வரனை கொடுக்கும் நரசிம்மர்..!
விஷ்ணு அவதாரத்தில் சிறந்த அவதாரமாக நரசிம்ம அவதாரத்தை தான் சொல்லுவார்கள்.
காரணம் பக்தன் ஒருவனின் சொல்லை காப்பாற்றுவதற்காக இந்த அவதாரம் எடுத்ததாக சொல்கின்றனர்.
மனிதனுக்கு நாக்கும், வாக்கும் சுத்தமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவன் மனிதனே அல்ல தசரதற்கு கொடுத்த
வாக்கை காப்பாற்ற தன் உயிரையும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
பிரகலாதனிற்கு கொடுத்த வாக்கிற்காக கம்பங்களை உடைத்து வெளியே வந்தார் நரசிம்மர். ” பிரகலாதாவிடம் எங்கப்பா உங்க விஷ்ணு ”
ஆளையே காணோம் என்று இரண்யன் கேட்க.., அதற்கு. ” அப்பா, அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் ” என பதில் அளித்திருக்கிறான்.
இதை கேட்ட விஷ்ணு பதற்றம் அடைந்து.., இவன் என்ன நம்மை காட்டி கொடுத்து விடுவானோ என நினைத்துக் கொண்டிருந்தார்.
அவர் நினைத்தது போலவே பிரகலாதா, இரண்யனிடன் தூணை கை காட்டி விடுகிறான். இரண்யன் அந்த தூணை உடைக்கிறார். அதற்கு பின்
மனித உடலும், சிங்க முகமும் கொண்ட “நரசிம்மனாய் ” தோன்றினார்.
“நரன்” என்றால் மனிதனை குறிக்கும் “சிம்மம்” என்றால் சிங்கத்தை குறிக்கும். இதனால் அவரை, “நரசிம்மன்” மற்றும் “நரசிங்கன்” என்றும் சொல்லுவார்கள்.
பின் அவனை இரணிய வதம் செய்தார். இரணிய வதம் முடித்த பிறகு பிரகலாதா விடம் சென்று, நீ ஏன்?
இரண்யனிடம் நான் இருந்த தூணை கை காட்டி சொன்னாய் துரும்பை கை காட்டியிருக்க கூடாதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரகலாதா நான் தூணை சொல்லாமல் துரும்பை சொன்னால். அவன் அதை “நாளைக்கு” தான் உடைத்து இருப்பான்.
நீங்களும் அவனை நாளை தான் வதம் செய்து இருப்பீர்கள். எனவே தான், நான் தூணை கை காட்டினேன்.
எனவே நரசிம்மரிடன் நாம் வேண்டுகோள் வைத்தால் அதை உடனே நிறைவேற்றி விடுவார்.
தினமும் 108 முறை “லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே” எனும் மந்திரத்தை சொல்லி நரசிம்மரை வழிபட்டால்.
நாம் நினைக்கும் செயல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் இதுப்போன்ற பல ஆன்மீக தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
வெ.லோகேஸ்வரி
Discussion about this post