காரணீஸ்வரர் கோவிலில் நந்தி ஊர்வலம்
சிவபெருமானின் தொண்டை மண்டல கோவில்களில், ஒன்றாக சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றம் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து, ஆராதனை முடிந்து. சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் சூரிய பிரபை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 6:00 மணிக்கு அதிகார நந்தி சேவை பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதில் கலந்து கொண்டு, அவரை தரிசனம் செய்தனர்.
மே 29ம் தேதி சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி அளிக்க உள்ளார்.
மேலும் மே 1ம் தேதி காலை 7மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் இழுக்க உள்ளார்கள். மே 4ம் தேதி காலை திருக்கல்யாணம் நடைபெற்று. மறுநாள் கொடி இறக்கத்துடன் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.