சென்னையில் வரும்-21 ஆம் தேதி நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள்(மார்ச் 21) நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள்(மார்ச் 21) நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் இல்லை என்பதால் அனைவரும் வரலாம் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் பிற மாவட்டங்களில் படிப்படியாக நடத்தப்படும்.
கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்த நிலையில்,தற்போது நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.