வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் சேர்ப்பு, திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் போன்ற பணிகள் இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 9ம் தேதி வாக்காளர்களின் பெயர் பட்டியல் வெளியானது இதனை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரி திருத்தங்களை மேற்கொள்ள நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது இதில் சுமார் 7 லட்சம் மனுக்கள் வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்றும் நாளையும் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை செர்த்துக் கொள்ள, பெயர் திருத்தம் மற்றும் முகவரி திருத்தங்களை செய்துகொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் வழக்கமாக வாக்களிக்கும் வாக்கு சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடத்தபட்டு வருகிறது. இந்த முகாம்களின் மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சரி செய்ய இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.