77 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைகள் மற்றும் தேச தலைவர்கள் வேடமடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி…
77 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் பள்ளி சார்பில் நாட்டுப்புற கலைகள்,சிலம்பம் சுற்றுதல்,குச்சிப்புடி மற்றும் தேச தலைவர்கள் போல் வேடம் அணிந்து ராசிபுரம் முக்கிய வீதிகளான பழைய பேருந்து நிலையம்,கடை வீதி,சேலம் சாலை,அண்ணா சாலை,நாமக்கல் சாலை உள்ளிட்ட வழியாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
Discussion about this post