இந்தியர்களால் மட்டுமே இதை செய்ய முடியும்..? பிரதமர் மோடி பேச்சு..
இன்று 77வது சுதந்திரதினம், இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்து சிறப்பு உரை ஆற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது.
இன்று 77வது சுதந்திரதினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள ராஜ்கோட் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.., செங்கோட்டையில் முப்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தேசிய கீதம் முழங்க.., 21 குண்டுகளுடன் பிரதமர் மோடி இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றினார், அப்போது அவருக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய நாட்டில் இருக்கும் 140 கோடி இந்தியர்களுக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.., உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது. இந்நாளில் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் நிலையான வளர்ச்சி குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வது இந்தியர்கள் மட்டுமே. இந்தியர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். அதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும் என கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..