அடுத்த வாழ்க்கைக்கு தயாரான நாக சைத்தன்யா.. முடிந்தது நிச்சயதார்த்தம்..
நாக சைத்தன்யா:
தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரகளில் ஒருவர் நாக சைத்தன்யா. பிரபல திரைப்பட நடிகர் நாகார்ஜுனா வின் மகனான இவர் 2009ஆம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் திரைப்துறையில் அறிமுகமானார்.
அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்த இவர் பிரபல நடிகை சமாந்தாவை கடந்த 2021 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து:
சில மாதங்களே இருவரும் ஒன்றாக வாழ்நனது வந்த நிலையில் ஆதே ஆண்டு இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர்.
அடுத்த திருமணம்:
அடுத்த திருமணத்திற்கு தயாரான நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதனை உறுதி செய்யும் விதமாக இருவீட்டாரின் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் ஒரு சிலர் வாழ்த்துகளை கூறினாலும் வேறு சிலர் வழக்கம் போல் திட்டியும் வருகின்றனர்.
-பவானி கார்த்திக்