மிலாது நபி கொண்டாடும் தேதி… தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாதுன் நபி என்ற பெயரில் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான மிலாதுன் நபி, வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது.
ஆனால் கடந்த 4 ஆம் தேதி பிறை தெரியாததால் வருகின்ற 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையை செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றி அறிவித்துள்ளது.
மேலும் இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.