மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி..!! பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான “தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் முதலீடு செய்துள்ளதாக சொல்லபடுகிறது.., முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர் .
அதற்கிடையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் சுமார் 525 கோடியை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதாக சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களும் புகார் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.
அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து நிறுவனத்திற்கும் சீல் வைத்தனர்.. அத்தோடு தேவனாதனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு அவர்களது சொத்துகளை முடக்கியுள்ளனர்..
ஜாமின் மனு கேட்டு தேவநாதன் யாதவ் மனுதாக்கல் செய்திருந்தார்., அந்த மனு மீதான விசாரணை நீதிபதி மலர் வேலன்டீனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை முன் வைத்தார்.. அதில் பண மோசடி செய்யவில்லை என்றும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தர உள்ளதாகவும் வாதங்களை முன் வைத்தனர்.. ஆனால்
எனவே தேவநாதன் உட்பட கைது செய்யப்பட்ட 3பேருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பாபு இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் தலைமறைவாக உள்ளார் என்றும் 800க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் தினமும் புகார்கள் வந்துகொண்டே இருப்பதாகவும். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
தற்போது மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிப்பதற்காக மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..