கிங் மேக்கர் ரெக்கார்ட் பிரேக்கர் தளபதி 69 அப்டேட்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
பாக்ஸ் ஆபிஸ் கிங் மேக்கர் “தளபதி விஜய்” குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் தற்போது பாக்ஸ் ஆஃபிசையே அதிர வைத்து வருகிறார். ஒரு பின்னனி பாடகரான இவர் இதுவரை 32 பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் 68 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய், தற்போது அரசியலில் களமிறங்கவுள்ளதால் சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது..
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைபடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளியதுடன்., அடுத்த தளபதி யார் என்பது பற்றியும் இந்த படத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது..
இப்படி நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் “தளபதி 69′ குறித்த முதல் அறிவிப்பு கடந்த மே 2௦ம் தேதி வெளியானது அதாவது இந்த படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும்., அதில் கதாநாயகியாக தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் “அபர்ணா பாலமுரளி” நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது..
இதுவரையில் இந்த அப்டேட்களை கொடுத்துள்ள படக்குழு தற்போது அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
தளபதி 69 படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி மட்டுமின்றி இன்னும் 2 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுநேரமாக இறங்கபோவதாக அறிவித்திருந்தார். சமூக பிரச்சனைகளை ஜனரஞ்சகமான முறையில் திரையில் காட்டுவதில் இயக்குனர் ஹெச்.வினோத் கில்லாடி என்பதால், அவருடன் விஜய் கை கோர்த்துள்ளது, அவருடைய அரசியல் என்ட்ரிக்கு நிச்சயமாக ஒரு திருப்புமுனையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..