அமித் பாப்னா உட்பட 4 பேருக்கும் அபராதம்..!! அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை..!! செபி அதிரடி முடிவு..!!
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி தடை விதித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் திருபாய் அம்பானிக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முகேஷ் அம்பானி, ஜியோ, ரிலையன்ஸ், பெட்ரோலியம், உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்..
அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி நடத்தி வந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் நஷ்டம் அடைந்து.., ஒவ்வொரு நிறுவனமாக செயல்பாட்டை இழந்து நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதனால் அனில் அம்பானிக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே முதலீட்டாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தி யுள்ளதாக அனில் அம்பானி மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. அதனால் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி தடை விதித்தது.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக்கூடாது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி தடை விதித்தது.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக்கூடாது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாகிகள் அமித் பாப்னா உள்பட 4 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அமித் பாபனாவுக்கு ₹27 கோடி, ரவீந்திர சுதால்கருக்கு ₹26 கோடி, பிங்கேஸ் ஷாவுக்கு ₹ 21 கோடி அபராதம், ரிலையன்ஸ் யூனிகார்ன் என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்சேஞ்ச் நெக்ஸ்ட்டுக்கு ₹25 கோடி அபராதம், ரிலையன்ஸ் கிளீன் ஜென், ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஃஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் 25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.., ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ், ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட்டுக்கும் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..