“என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்…” செந்தில் பாலாஜி உருக்க பதிவு..!!
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமான பதிவொன்றை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ளார்…
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில்.., ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.. அதன் பின் அமலாக்கதுறை அதிகரிகள் காலம் தாழ்த்துவதால் 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது..
செந்தில் பாலாஜியின் உடல்நலம் கருதி கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. தொடர்ந்து 58 முறை அவரது ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது..
சென்னை விமான நிலையத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, காலில் விழுந்து வணங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்..
அதில், 471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாயுமானவராய் தாங்கினீர்கள், என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என்றும், உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.