என் வளர்ச்சியை காண என் அப்பா இல்லை… நடிகர் விஜய் சேதுபதி பேட்டி..!
தென்மேற்கு பருவ காற்று திரைப்படத்தின் ஹீரோவாக நடித்தவர் விஜய் சேதுபதி. இதற்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு,சுந்தர பாண்டியன்,நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் சிரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மக்களால் அறியப்பட்ட சேதுபதி:
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தர்மதுறை போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு மக்களிடம் பெரிதும் கவரப்பட்டது. அதன்பின் இவருக்கென தனி ரசிகர் கூட்டங்கள் உருவானது.
96, சேதுபதி, விஜயுடன் நடித்த மாஷ்டர் ஆகிய திரைப்படங்களில் சேதுபதியின் நடிப்பு பாராட்டிற்குரியது.கடின உழைப்பாழ் வந்த விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், குணசித்தர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும், பின்னிபெடல் எடுத்துவிடுவார்.
இதனால் ரசிகர்கள் இவரை மக்கள் செல்வன் என்று கொண்டாடி வருகின்றனர். தற்போது
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது அப்பாவின் மறைவு குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.
பேட்டி :
எங்கள் வீடடில் மூன்று ஆண்கள் அதில் நானும் எங்க அப்பாவும் நிறைய பேசி கொண்டே இருப்போம்.
அப்படி பேசும் போது எங்க அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வாரு நீ நல்ல வருவடா முயற்ச்சி பன்னு உன்ன பத்தி உனக்கு தெரியல என சொல்லி கொண்டே இருப்பாரு இப்போ நான் நல்ல வந்துருக்க ஆனால் அதனை பார்க்க எங்க அப்பா இல்லை என்பது எனக்கு வேதனை தரும்.
அப்பா இறப்பதற்கு முன் :
அவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு என்னிடம் கேட்டார். என்னடா பன்ன போற முன்னுக்கு வந்துடுவியா அதை இறப்பதற்கு முன் பார்ப்பேனா என்று கேட்டார்.
அப்போது நான் நடித்த ஒரு படத்தின் போட்டோவை காட்டி எனக்கு நடிக்க வருதுப்பா, நான் நடிக் போகிறேன் என்று சொன்னேன் ரொம்ப சந்தோஷமாக என்னை பார்த்தார்.
அப்பாவிற்கு உடம்பு முடில, உடம்பு சில்லுனு இருக்கு:
நான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தேன் அப்போது, நைட் 12 மணி இருக்கும்.
என் அம்மா போன் பண்ணி அப்பாவிற்கு உடம்பு முடில, உடம்பு சில்லுனு இருக்கு என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று அப்பாவின் பக்கத்தில் உங்காந்து அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். நான் பேசியது அவருக்கு கேட்டதா, இல்லையா என்று, எனக்கு தெரியாது ஆனால் நான் அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்.
மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்த அதே நாளில் ஒரு வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக நடித்த முதல் படம் வெளியானது.
இன்னைக்கு நான் வாழ்க்கிற வாழ்க்கையை அவர் பார்க்காமலே சென்றுவிட்டாரே என்கிற கவலை என் மனதிற்குள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. என அந்த பேட்டியில் உறுக்கமாக கூறியுள்ளார்.
-பவானிகார்த்திக்