மதம் ஜாதி அரசியலை கடந்து மக்கள் வாழ வேண்டும்..! துரை வைகோ பேச்சு..!
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரை சேர்ந்த மதிமுக திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு புதிய இல்லத்தை மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
முன்னதாக அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வாழ்த்துரையாற்றிய துரைவைகோ,
நம் தலைவர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு வந்து விட்டார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி கழகத்திற்கு களப்பணி ஆற்றுவார் எனவும் தூத்துகுடியில் உலக கோடீஸ்வரர்களின் நச்சு ஆலைஸ்டெர்லைட் ஆலை அப்புறப்படுத்த காரணம் தலைவர் வைகோ தஞ்சை வேளாண் மண்டலத்தில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் நாசகார திட்டங்களை தடுத்தவர் தலைவர் வைகோ எனவும்..
தேர்தல் நேரங்களில் அரசியலுக்காக கிராமங்களில் ஒருவருக்கொருவர் பகைமையுடன் இருக்க கூடாது மதம் ஜாதி மற்றும் அரசியலை கடந்து கிராமங்களில் மக்கள் ஒற்றுமையுடன் சகோரதரர்களாக வாழ வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன், அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..