“மை டியர் லவ்வரு..” மதகஜ ராஜா படத்தின் கதை…!!
11 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில், நடிகர் விஷால், சந்தானம், நடிகை அஞ்சலி, மற்றும் வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் கதை என்ன..? ஏன் 11 ஆண்டுகளாக வெளியாக வில்லை என்பதை இங்கு படிக்கலாம்.
இந்த படத்தை பற்றி சொல்லனும்னா கதை எல்லாம் ஒன்றும் இல்லை. நண்பர்களின் பிரச்சினையை தீர்க்க வில்லனோடு சண்டையிட்டு ஜெயிக்கும் ஹீரோவின் கதை என்று சொல்லலாம். இதில் இடையில் மக்களை சிரிப்பூட்ட காமெடி மட்டும் சேர்த்து இருக்காங்க. இயக்குனர் சுந்தர் சி படம் என்றாலே என்டர்டெயின்மென்ட்க்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது. இந்தப் படம் இரண்டு மணி நேரமும் தியேட்டரில் சிரித்து கொண்டு இருக்கலாம்.
இப்படத்தில் விஷால் ஆக்ஷன், நட்பு, காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஞ்சலி மீது காதல் கொண்டு பின் வரலட்சுமி மீது காதல் கொண்டு நண்பர்களுக்காக களம் இறங்குவது என காதலுக்கும், நட்புக்குமான ஒரு படம் என சொல்லலாம். அதேபோல சந்தானம் தற்போது ஈரோவாக நடித்து வந்தாலும், அவரது காமெடிக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும். 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரை காமெடியனாக பார்ப்பது ரசிர்களுக்கு ஒரு ட்ரீட் என சொல்லலாம்.
மனோபாலா, மணிவண்ணன், சிட்டிபாபு என மறைந்த நடிகர்களை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. விஷால் நண்பர்களாக சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா நடித்திருக்கிறார்கள். கார்ப்பரேட் வில்லனாக சோனு சூட், வில்லத்தனம் செய்திருக்கிறார்.
குறிப்பாக இப்படத்தில் இசையமைத்துள்ள விஜய் ஆண்டனியின் பாடல்கள் எல்லாம் வேற லெவல் என சொல்லலாம். இவரும் தற்போது இசையமைப்பாளராக நடித்து வருவதால்,. இப்படத்தை பார்த்த பலரும் மீண்டும் விஜய் ஆண்டனி இசையமைக்க வந்தால் போதும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..