காண கண்கோடி வேண்டும்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு சாற்று வைபவம் நடைபெற்றுள்ளது..
புரட்டாசி பிறந்ததும் வருடம் தோறும் பிரமோற்சவம் அன்று திருப்பதி ஏழுமலையான் சாற்றி கொள்வதற்கான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுக்கும் பூ மாலை, கிளி பரிவட்டம் கொண்டு வருவது வழக்கம்.., அதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டு கொண்டு செல்வார்கள்..
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 2௦ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளுக்கு சீர் கொண்டு செல்லப்பட்டது.., அதற்கு எதிர்சீராக பெருமாள் கோவிலில் இருந்து மறு சீர் கொண்டு வரப்பட்டது..,
அதில் பட்டு மற்றும் மங்கள பொருட்கள் கொண்டு வரப்பட்டன அதை ரெங்க மன்னருக்கு சாற்றும் வைபவம் என சொல்லுவார்கள்.., நேற்று இரவு 7:3௦ மணியளவில் ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.., பின் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..