தர்காவின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை..!!
வேலூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜோகி மடம் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் காலை தர்காவில் தொழுகைக்காக சென்ற போது தர்காவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உள்ளே சென்று பார்த்த போது, தர்காவின் அருகே இருந்த உண்டியலை ஆயுதத்தால் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.