லியோ திடைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது லியோ தான். நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லியோ படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே அப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் . விரைவில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விழா அரங்கின் வெளியே பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.