பெண் மருத்துவர் படுகொலை..!! வெளியான பரிசோதனை முடிவு..!! அதிர்ச்சியின் உச்சம்..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 8-ஆம் தேதி அன்று இரவு பணிக்காக மருத்துவமனையில் இருந்துள்ளார். அடுத்த நாள், படுகாயம் காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை அறிந்த மருத்துவரின் பெற்றோர், தனது மகளை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், இந்த வழக்கை, சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து, நீதிமன்றமும் இந்த வழக்கை, சி.பி,ஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை, தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து, விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில், என்னென்ன தகவல்கள் கிடைத்துள்ளது என்ற தகவல்கள், தற்போது கிடைத்துள்ளது.
அதாவது, அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் என்ன உள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அப்பெண் மருத்துவரின் முகத்தில், மிகவும் அதிகப்படியான அளவில் காயங்கள் உள்ளதாம்.
மேலும், கழுத்து, காது, உதடுகள், அந்தரங்க உறுப்புகள் ஆகியவற்றில், கடுமையான காயங்கள் உள்ளதாம். மேலும், 150 மி.கி. அளவில் விந்தணுக்கள் உள்ளதாம். இவ்வளவு அதிகமாக விந்தணுக்களின் அளவு இருப்பதால், இது கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வளவு நாட்கள் ஒருவர் தான் மருத்துவரை கொலை செய்திப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது கூட்டு பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்