அதிகரிக்கும் சாதி உச்சரிப்பு..!! அரசு எடுத்த அடிரடி முடிவு..!! விதிகப்பட்ட தடைகள்..!!
வடதமிழகத்தை காட்டிலும், தென் தமிழகத்தில் தான் அதிக சாதிய கலவரங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்கு, அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் நிகழும் சாதிய மோதல்களை தடுப்பதற்கு, அரசு அதிக முனைப்பு காட்டி வருகிறது. “சாதி அடையாள கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது, சாதிய அடையாளத்துடன் பள்ளிகளுக்கு பெயர் வைக்கக் கூடாது” என்று இதற்கு முன்னர், அரசு தரப்பில் அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெல்லை காவல்துறை சார்பாக, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
அதாவது, “பேருந்துகளில் சாதிய ரீதியிலான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது, மாணவர்கள் மத்தியில் நடக்கும் சிறுசிறு மோதல்களையும், காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும், யாராவது கஞ்சா கடத்துவது போல் சந்தேகம் எழுந்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சாதிய ரீதியிலான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது, மீறி அவ்வாறு செய்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நடத்துனர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்