இன்று நடைப்பெற்றுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் உரையாற்றியப் பின் ஒன்றிய அமைச்சர் அமைச்சர் ஸ்மிருதி ராணி பதில் உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர், “ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்” என கூறினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து ஊழலை பற்றி பேசி கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார். ஸ்ருமிதி ராணி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைக்கு தலைமை ஏற்று நடத்திய ராஜேந்திர அகர்வாலிடம் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்றம் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post