நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இருப்பினும் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை தான் சென்ற பாதயாத்திரை பற்றி உருக்கமாக பேசினார்.
ராகுல் காந்தி பேச்சு:
“கடந்த ஆண்டு 130 நாட்கள் இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்றேன். தனியாக இல்லை, பலருடன் சென்றேன். யாத்திரையின் போது பலரும் என்னிடம் ராகுல் ஏன் நடக்கிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டனர். ஏன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்கிறீர்கள் என்று கேட்டனர்.
இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பினேன். தினமும் 10 கிலோமீட்டர் ஓடுவேன். அதனால் 25 கிலோமீட்டர் நடப்பதில் என்ன பெரிய விஷயம் என்று நினைத்தேன்.
பயணத்தின் போது விவசாயியின் கண்களில் இருந்த வலி, என் கண்களுக்குப் புலப்பட்டது.” இந்த நடைப்பயணம் மூலம் என் மனதில் ஆணவம் மற்றும் வெறுப்புணர்வு அகன்று விட்டதாக தெரிவித்தார்.
Discussion about this post