7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வஞ்சகனை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்..!!
பழனி அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை விளையாட சொல்லி தருவதாக அழைத்து சென்ற காம கொடூரன்.., அந்த சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளான்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள் சிறுமியை ரத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். பொது மக்களை பார்த்த அந்த காம கொடூர குப்பன்.., தப்பி ஓடியுள்ளான்.., அப்பொழுது அருகே இருந்து இடுக்கு சுவரில் சிக்கியுள்ளான்.
வெளியே வரவும் முடியாமல்.., தப்பி செல்லவும் முடியாமல் சிக்கிய குப்பனை பொது மக்கள் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். பின் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு பழனி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின் அந்த காம கொடூரனை பிடித்த பொழுது அவன் பாக்கெட்டில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் விழுந்துள்ளது.., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடித்துள்ளனர்.
மேலும் கஞ்சா எப்படி கிடைத்தது.., யார் விற்பனை செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post