தமிழகத்தின் ஊட்டி அருகே உள்ள முத்துநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியினருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சனிக்கிழமை ராகுல் காந்தி கேரளா மற்றும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மக்களவையில் எம்.பி.,யாக மீண்டும் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக கேரளாவில் உள்ள தன் சொந்தத் தொகுதியான வயநாடுக்கும் அவர் சென்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊட்டியில் முத்தநாடுமந்து பழங்குடி கிராமத்தில் உள்ள தோடர் பழங்குடியின மக்களைச் சந்தித்த ராகுல் காந்தி அந்த மக்களுடன் பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. பாரம்பரிய சால்வை அணிந்து உள்ளூர் மக்களுடன் வட்டமாக நின்று நடனமாடுகிறார்.
பின்னர் மாலையில் கேரளாவின் வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு ராகுல் காந்தி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து இன்றும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் வி.டி.சித்திக் கூறியுள்ளார்.
VIDEO | Congress leader Rahul Gandhi participated in a tribal dance along with members of the Toda tribal community in Muthunadu village of Nilgiris district, Tamil Nadu earlier today. pic.twitter.com/fVZJvgJzDy
— Press Trust of India (@PTI_News) August 12, 2023