மலையாளத்தில் கமிட் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..!! ஜோடியாகும் ஜோஜூ ஜார்ஜ்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் “ஐஸ்வர்யா ராஜேஷ்“. 2015ம் ஆண்டு வெளியான காக்க முட்டை என்ற படத்தின் மூலம் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்து இருப்பார், அவரின் அந்த எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர வைத்தது. எனவே பல பட வாய்ப்புகள் இவருக்கு வரிசை கட்டி நின்றது.
ஆறாது சினம், மனிதன், கனா, நம்ப வீட்டு பிள்ளை, என பல படங்களில் நடித்து இருக்கிறார், தற்போது வெளியான ஃபர்கான என்ற படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. சற்று சர்ச்சையை கிளப்பினாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து நடித்த படம் தான் புலிமடா.., “பெண் வாசனை” என்ற டேஃக் லைனுடன் போஸ்டரும், டைட்டிலும் தயாராகி வருகிறது. ரிலீசுக்கு தயாரா இருக்கும் இந்த படம் மக்களின் ஆதரவை பெறுமா எனவும் எதிர்பார்க்க படுகிறது.
இந்த படத்தை மலையாளத்தில் பிரபல இயக்குனரான ஏ.கே.சாஜன் இயக்கியதால் கதை மிகவும் அனைவராலும் கவரப்படும் வகையில் இருக்கும் என கேரளா மக்கள் சொல்கின்றனர்.
மேலும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் இரட்ட படத்தின் இரண்டாவது பாகமாக தான் புலிமடா எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த படத்தில் செம்பன் வினோத், லிஜோ மோல். ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, பாலச்சந்திர மேனன், ஜானி ஆண்டனி, கிருஷ்ண பிரபா, சோனா நாயர் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.
மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெரும் என இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post