ஈரோடு மாவட்டத்தில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள டானாபுதூரில் தனலட்சுமி என்பவரை கடித்த அந்த நாயை, அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த நாய், 15-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்துள்ளது. காயமடைந்த அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று சிகிச்சை பெற்றனர். அவர்களில் தனலட்சுமி உள்ளிட்ட இரண்டு பேர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு இருக்கும் சிறுவனை வெறிநாய் கடித்து விட்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.