“எத்திசையும் தமிழணங்கே” முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர்,
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெய்ன், அமெரிக்கா-என்றுஉலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
அதனால் தான், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, இந்த ஆண்டு, இந்த விழாவின் கருப்பொருளாக “எத்திசையும் தமிழணங்கே” என்று தமிழ்த்தாய் வாழ்த்தின் வரிகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ் தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும்.
அயலகங்களில் குடிமக்களாக வாழும் தமிழர்களும், அயலகங்களுக்குச் சென்று உழைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் வளமாக வாழத்தான் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஓய்வில்லாமல் உழைக்கிறது!நிலமெங்கும் நிறைந்திருக்கும் அனைத்து தமிழர்களுக்காகவும் செயல்பட்டு, உங்களின் இதயங்களை ஆளும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு விளங்குகிறது என குறிப்பிட்டார்..
எந்த தூரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அயலகங்களில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
இதில் தன்னார்வலர்களாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்குவதாகவும். புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு விருது, தங்களின் நாட்டில், சமூகநலனுக்கும், தாயக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தமிழர்களுக்கு விருதுகள், போர் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தாயகத்துக்கு அழைத்துவரும்சிறப்பு விமானங்களுக்கு உதவி, அயலகங்களில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்கிறோம் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..