உசிலம்பட்டியில் 58 கால்வாய் திட்ட விரிவாக்க பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு!!
உசிலம்பட்டியில் 58 கால்வாய் திட்ட விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய 58 கால்வாய் திட்டம் வைகை அணையில் இருந்து 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழுமையாக நிரப்பப்பட்டது.
இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென ஜோதிநாயக்கனூர் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவர் ராமன் மற்றும் முக்கிய கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமங்களில் உள்ள கண்மாய்களை நேரில் ஆய்வு செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.