அதிக வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியததால் பெண் தூக்கிட்டு தற்கொலை…
வேலூரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் அவதூராக பேசியதால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தினேஷ் மற்றும் மோனிஷா. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் வட்டிக்கு பணம் என்று வாங்கியுள்ளனர்.
இதனைதொடர்ந்து, முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அதில் 30 ஆயிரம் செலுத்திய பிறகு பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தர சொல்லி அவதூறாக பேசி மிரட்டி உள்ளார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த மோனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த காவல்துறையினர் மோனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாலதியை கைது செய்ய கோரி மோனிஷாவின் உறவினர்கள் காவல் நிலையத்தை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.