ADVERTISEMENT
கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் பயிர்கள் சேதம்..
கயத்தார் அருகே கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கயத்தார் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தில் உள்ள 2 கண்மாய்கள் முழுவதும் நிரம்பி, கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
அவ்வாறு வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. சுமார் 50 ஏக்கில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், உளுந்து ,பாசி, நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)