ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரில் பண மோசடி..! யார் அந்த ஆசாமி..!!
நடிகர், நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அந்த ஆசைக்காக பலறும் முயற்சி செய்து வருவது.., உண்டு. இதை பயன் படுத்திய ஒரு மர்ம ஆசாமி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான “ராஜ்கமல் பிமில்ஸ்” நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான “இன்ஸ்டாகிராம்” மூலம் SK21 படத்திற்கு துணை நடிகர் நடிகையர்கள் தேவை என.., விளம்பரம் கொடுத்து கீழே ஒரு வாட்ஸ்அப் எண்ணையும் கொடுத்துள்ளனர். அதை பார்த்த சில இளைஞர்கள் நடிகராகி விட வேண்டும் என்ற ஆசையில் மேசேஜ் செய்துள்ளனர்.
அதில் 5 புகைப்படங்கள்.., மற்றும் முகவரி கேட்டுள்ளனர், முகவரி மற்றும் புகைப்படம் அனுப்பிய 2 நாட்கள் கழித்து, நீங்கள் செலக்ட் ஆக வேண்டும் என்றால் எங்களுக்கு 10,000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப வேண்டும்.., நீங்கள் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்களை நடிக்க அழைத்து விடுவோம் என கூறியுள்ளனர்.
இதை நம்பி பல பேர் பணம் அனுப்பியுள்ளனர்.., பணம் செலுத்தி 15 நாட்களுக்கும் மேலாகி தகவல் எதுவும் வராததால்.., சில இளைஞர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சென்று இதுபற்றி விவாதித்துள்ளனர். அதன் பின்னரே இவர்கள் ஏமாற்ற பட்டு இருப்பது தெரிய வந்தது.
பின் இது குறித்து ஆழ்வார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த காவலர்கள்.., பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரின் பெயரில் அந்த மர்ம ஆசாமியையும் தேடி வருவதாகவும்.., சீக்கிரமே அவரை பிடித்து விடுவோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..