சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(மார்ச்.21) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர்.
கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 ஏக்கர் பரப்பில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.