ருசியான பன்னீர் ஜாமுன் செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
ஜாமுன் செய்ய
பால் – 1 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு
தண்ணீர் – 1/4 கப்
சோள மாவு – 1 தேக்கரண்டி
பால் பவுடர் – 2 மேசைக்கரண்டி
ரோஸ் கலர் ஜெல்
சர்க்கரை பாகு தயாரிக்க
தண்ணீர் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
ரோஸ் எசென்ஸ் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த ரோஜா இதழ்கள்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும்.
பின் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து கொதிக்கும் பாலில் ஊற்ற வேண்டும். பின் பால் திரிந்தபின்,வடிக்கட்டி பின் பன்னீரை தண்ணீரால் நன்றாக அலசி நன்றாக நீர் வடிய விட வேண்டும்.
ஒரு ஃபேனில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
சர்க்கரை கரைந்தபின் ரோஸ் எசென்ஸ்,காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
வடிக்கட்டிய பன்னீரை, பால் பவுடர் மற்றும் சோள மாவு சேர்த்து பிசைய வேண்டும்.
அதனுடன் ரோஸ்கலர் ஜெல்லை சேர்த்து பிசையவும்.
பன்னீர் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
பின் அந்த சர்க்கரை பாகிலே 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் ஜாமுன் தயார்.