ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது.
அந்த ஏவுகணை பாகிஸ்தானின் மியான்கன்னு நகரில் விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post