விடுதியின் வருகைப் பதிவேட்டில் குளறுபடி இருந்ததால் விடுதியின் வார்டனை அதிரடியாக நீக்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி – காஸ் உள்ளிட்ட சமையல் பொருட்களின் இருப்பை பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரியான அளவில் இருக்கின்றதா என்று ஆய்வு செய்தப் போது , விடுதி பதிவேட்டில் குளறுபடிகள் இருப்பதைக் கண்டார்.
அதன் அடுத்த நொடியே விடுதியின் வார்டன் முருகன் என்பவரை பணி இடை நீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டு சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.