சனாதனத்தை பற்றி பேசியதால் எடப்பாடிக்கு கஷ்டமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் என் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என்று கருதுகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஒன் மோர் எடுக்கலாம் ஆனால் அரசியலில் அப்படி எடுக்க முடியாது.. கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ம் இடம் பிடித்த பிரக்யானந்தா மற்றும் இந்திய அளவில் முதலிடம் பிடித்த குகேஷ் ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னை முகப்பேரில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் உலகச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்களது கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், சினிமாவில் தவறு செய்து விட்டால் ஒன் மோர் டேக் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரசியலில் அப்படி கிடையாது. மனதில் என்ன உள்ளதோ அதைத்தான் பேச வேண்டும். அரசியலில் நடிக்க முடியாது அப்படி நடித்தாலும் மாட்டிக் கொள்வீர்கள். முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் என்னுடைய பள்ளி பருவத்தில் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவர் ஆவார்.
பின்னர் பிரக்யானந்தா மற்றும் முகேஷ் ஆகியோருக்கு தல 20 லட்ச ரூபாய் பரிசு தொகையையும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு ஆகியோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், சனாதனத்தை பற்றி பேசியதால் எடப்பாடிக்கு கஷ்டமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் என் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் என்று கருதுகிறேன். என கூறினார்.