பிரபல நாளிதழுக்கு கண்டனம் விடுத்த அமைச்சர் உதயநிதி..!! நெத்தியடி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் இடை நிறுத்தத்தை குறைப்பதற்காகவும் பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் குறித்து ஒரு செய்திதாள் வெளியிட்டுள்ள செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் முதலைமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார், காலையில் பள்ளி வரும் மாணவர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வருவதால் காலை உணவை சாப்பிடாமல் வந்து விடுவதால் அவர்களின் நலனை கருதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் காலை உணவு திட்டத்திற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
417 மாநகராட்சி பள்ளியில் 43,681 மாணவர்களும்,
163 நகராட்சி பள்ளியில் 17,427 மாணவர்களும்,
728 வட்டார மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள் என இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 1,14,095 மாணவர்கள் பயன் அடைந்து இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் பற்றி அறிந்து கொள்வதற்காக தெலுங்கானா அதிகாரிகள் சென்னை வந்து தமிழகம் முழுவதும் இந்த சிறப்பாக செய்யப்படுவதற்கு என்ன காரணம் என அதிகாரிகள் அந்த உணவை சாப்பிட்டு வரும் நிலையில்.., “காலை உணவு திட்டம், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு..! “ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று ஒரு பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது,. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் அளித்திருக்கும் பதில்.., அந்த பத்திரிக்கைக்கு நெத்தியடியாக இருக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..