தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழக அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார்.
அப்போது அவருக்கு அதிகாலை 4 மணி அளவில் சிதம்பரம் அருகே வந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு அமைச்சருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் எஸ் பி சக்திகணேசன் மருத்துவமனைக்கு வந்து அமைச்சரிடம் உடல் நலம் குறித்து விசாரித்து தகவல் தெரிவித்துள்ளார்.