பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் Govt of Pakistan எனும் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில் இந்த நாட்டின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் வெளியாகிறது.
இந்நிலையில் தான் Govt of Pakistan எனும் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த பக்கத்தில் சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அரசின் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு முடக்கத்தின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.
நாட்டுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பினால் அந்த பதிவுகளை நீக்க ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது அது ஒரு காரணமாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போதைய ட்விட்டர் பக்கம் முடக்கம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.