நியாயவிலை அங்காடியில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு..!! பொதுமக்களுக்கு அளித்த உறுதி..!!
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கீழ்ப்பாக்கம், ஃபிளவர்ஸ் சாலை, அமுதம் நியாயவிலை அங்காடியில் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், ஃபிளவர்ஸ் சாலை, அமுதம் நியாயவிலை அங்காடியில் 24.03.2025 அன்று மாலையில் விற்பனை முனைய இயந்திரத்துடன் எடைத்தராசை இணைத்தல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார்.
விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகைப் பதிவு, எடைத்தராசில் பொருளை எடைபோட்டு விற்பனை முனைய இயத்திரத்துடன் இணைத்து ரசீது போடுதல், போன்றவற்றைப் பற்றிக் கடை விற்பனையாளரிடமும் பொதுமக்களிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வின் போது பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி நியாய விலைக் கடையில் வழங்கப்படும் இன்றியமையாப் பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்தும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
மேற்கண்ட ஆய்வின்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர், துணை ஆணையாளர்(ந) வடக்கு(பொ), துணை ஆணையாளர்(ந) தெற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்(வடக்கு), இணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம் -1) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.